1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (07:59 IST)

வாஜ்பாய் சாம்பலில் அரசியலா? சகோதரி மகள் வேதனை

வாஜ்பாய் சாம்பலிலும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதற்காக அரசியல் செய்வதாக வாஜ்பாய் அவர்களின் சகோதரி மகள் கருணா சுக்லா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
சட்டீஸ்கர் மாநிலத் தலைநகராக அறிவிக்கப்படவுள்ள நயா ராய்ப்பூர் நகரின் பெயர் அடல்நகர்  என மாற்றப்படும் என அம்மாநில பா.ஜ.க. அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக வாஜ்பாயின் பெயரைகூட உச்சரிக்காத பாஜக தலலவர்கள் தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் சட்டீஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங் வாஜ்பாயின் பெயரை வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக வாஜ்பாயின் சகோதரி மகள் கருணா சுக்லா குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும் இதற்கு முன் அறிவிக்காத நிலையில் பல்வேறு திட்டங்களுக்கும் வாஜ்பாயின் பெயர் மாற்றப்படுவது குறித்தும் கருணா சுக்லாகுறை கூறியுள்ளார்.. இவர் தற்போது  சட்டீஸ்கர் மாநிலம் ஜாஞ்கிர்  மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.