மோடியை கட்டிப்பிடித்தது எனது கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை: ராகுல் காந்தி

Rahul Gandhi
Last Updated: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (17:23 IST)
பிரதமர் மோடியை நான் கட்டிப்பிடித்தது எனது கட்சியில் உள்ளவர்கள் சிலர் விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்துவிட்டு தனக்கு இருக்கைக்கு சென்று அருகில் இருந்தவரை பார்த்து கண்ணடித்தார். இந்த சம்பவம் வைரலாக உலா வந்தது.
 
இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
 
உங்களை வெறுப்பவர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதே காந்திய சிந்தனை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 
 
நான் மோடியை தட்டுத் தழுவியதை பிரதமர் மோடி விரும்பவில்லை. பிரதமரை நான் கட்டித் தழுவியதை அவர் விரும்பவில்லை. இருந்தாலும் வெறுப்பை போக்கும் எனது எண்ணம் வெற்றி பெற்றுள்ளது. 
 
என் கட்சிகள் உள்ள சிலருக்கே பிடிக்கவில்லை. அப்படி நான் செய்து இருக்கக்கூடாது என்று பின்னர் அவர்கள் கூறினார். ஆனால், நான் அவர்கள் கருத்தை ஏற்கவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :