புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2019 (10:22 IST)

கரையை கடந்தது புல்புல்..

புல்புல் புயல் மேற்கு வங்காளத்தை கடலோரத்தை ஒட்டி கரையை கடந்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருபெற்றது. அந்த புயலுக்கு “புல்புல்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் மணிக்கு 130 முதல் 140 கி.மீ.வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று அதிகாலை பங்களாதேஷ் மற்றும்  மேற்கு வங்காளம் ஆகிய கடலோர பகுதிகளை ஒட்டி புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள பல மரங்கள் சாய்ந்து வேரோடு விழுந்துள்ளன. 
 
கொல்கத்தாவில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் ஒருவர் அதனடியில் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஒடிசா பகுதியில் சுவர் இடிந்து ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
புல்புல் புயலால் கொல்கத்தா விமான நிலையம் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மூடப்பட்டது. மேலும் மேற்கு வங்காளத்தில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.