மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்னவென்று ஆராய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு...
பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.