திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (15:27 IST)

கனடா பிரதமர் செல்ல மகன் ஹேட்ரின் சுட்டித்தனம் - வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கடைசி மகன் ஹேட்ரினின் சுட்டித்தனமாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வருகிறது.

 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 7 நாள் பயணமாக சமீபத்தில் குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் தாஜ்மஹால் உள்ளிட்ட பல பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்தார். அதன் பின் டெல்லி வந்த அவருக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து உபசரித்தார்.

 
இந்நிலையில் ஜஸ்டினின் கடைசி மகன் ஹேட்ரினின் சுட்டித்தனம் புகைப்படங்களாக வெளிவந்துள்ளது. வாஞ்சையுடன் மோடி ஹேட்ரினின் கன்னத்தை தடவ, ஹேட்ரினோ பாராமுகம் காட்டி கோபமாக திரும்பி நிற்பது முதல் அவன் செய்த அனைத்து சேட்டைகளும் இணையத்தில் வைரல் ஹிட்.

 
பலரையும் கவர்ந்த ஹேட்ரினினின் சுட்டித்தனமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...