1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:17 IST)

முக ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மோடி-அமித்ஷா: தமிழக அரசியலில் பரபரப்பு

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நலம் சார்ந்ததாக செய்திகள் வெளியாகியது. பதிலுக்கு பிரதமர் மோடியின் நலம் குறித்து முக ஸ்டாலின் விசாரித்ததாகவும் தெரிகிறது. பிரதமர் மோடியை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முக ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் அமித்ஷா மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இன்று நண்பகல் திமுக தலைவர் முக ஸ்டாலினை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவரும் நலம் விசாரித்து தொலைபேசி அழைப்பு வந்ததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினை மட்டுமின்றி தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்தும் பிரதமர் மோடி விசாரித்ததாகவும் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிரதமர் மோடி நலம் விசாரித்ததால் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் குறித்து முக ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டபோது மத்திய அரசு மிகவும் கவனத்துடன் கொரோனா வைரஸுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தமிழகம் உள்பட அனைத்து மாநில மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஸ்டாலினிடம் பிரதமர் உறுதியளித்தார்
 
முக ஸ்டாலின் மீது அக்கறை கொண்டு பிரதமரும், உள்துறை அமைச்சரும் தொலைபேசியில் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது