வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (19:42 IST)

பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவது என்பது தெரிந்ததே. இன்று ஒரே நாளில் 600-க்கும் அதிகமான இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சற்று முன்னர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் கொரோனாவை ஒழிக்க இருநாடுகளும் முழுபலத்தையும் காட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.