1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (09:46 IST)

கோளாறு கொடுக்காதீங்க டா... உஷாரா அட்வைஸ் கொடுத்த ஈபி!!

தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி நேற்று மக்களிடௌயே உரையாற்றினார். 
 
அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார். 
 
இதனை ஏற்றுக்கொண்டும், விமர்சித்தும் பல கருத்துக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளது. அது என்னவெனில், தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள். அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும். எனவே மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.