சத்தம் இல்லாம சைலண்டா பண்ணுங்க! – பிரதமர் மோடி அட்வைஸ்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் எந்த வெறுப்புணர்வையும் தூண்டாமல் அமைதியாக பணிகளை செய்ய மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அயோத்தி நில விவகாரத்தில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் வேறு இடம் ஒதுக்கப்பட்டது. ராம கோவில் கட்டுவதற்காக ”ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஸ்தலம்” என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் தலைவராக நிருத்ய கோபால்தாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளனர். அவர்களிடம் ராமர் கோவில் பணிகள் குறித்து பேசிய பிரதமர் முரண்பாடு மற்றும் வெறுப்புணர்ச்சி போன்றவற்றை தூண்டாமல் அமைதியான முறையில் கோவில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ராமர் கோவில் பூமி பூஜைக்கு நிர்வாகிகள் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.