மோடியின் மாஸ்டர் ப்ளான்: மத்திய அமைச்சரவை மாற்றத்தில் கவனிக்கபட வேண்டியவை...
மத்திய அமைச்சரவையில் நாளை அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில், மோடி இதில் சில மாஸ்டர் திட்டங்களையும் கொண்டுள்ளாதாக தெரிகிறது.
சமீபத்தில், ராஜிவ் பிரதாப் ரூடி, சஞ்சீவ் குமார் பால்யன், பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் மஹேந்திர நாத் பாண்டே ஆகிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் மத்திய அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்கள் நாளை நடைபெறும் என்று தெரிகிறது. இதன்படி, அமைச்சரவை மாற்றப்படும் பட்சத்தில் அது மோடி தலைமையிலான மத்திய அரசின் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாக அமையும்.
# பீகார் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தமிழக அதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம்.
# அதிமுகவை சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, கே.வேணுகோபால், மைத்ரேயன், வைத்திலிங்கம், ஆகியோரின் பெயர் இந்த மாற்றத்தில் இடம்பெற்றுள்ளது.
# அருண் ஜெட்லி மற்றும் ஹர்ஷ் வர்தன் ஆகிய அமைச்சர்களின் துறை பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
# முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
# சஞ்சீவ் பல்யான், ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட அமைச்சர்களின் மத்திய அரசு பதவி பரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
# காலியாக இருக்கும் தமிழக ஆளுநர் பதவியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம்.
# தமிழக பாஜக சார்பில் அதன் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.