வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (11:20 IST)

அருண் ஜெட்லியின் இறுதி சடங்கில் செல்ஃபோன்கள் திருட்டு: பாஜகவினர் பதற்றம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதிசடங்கில் 11 செல்ஃபோன்கள் திருடப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 ஆம் தேதி, உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார். அவரது உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டெல்லி யமுனை கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு துப்பாக்கிகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோவின் செல்ஃபோன் திருட்டப்பட்டுள்ளது. மேலும் அவரை தொடர்ந்து அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்ட 10 பேரின் செல்ஃபோன்களும் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பாஜவினரின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது செல்ஃபோன்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.