புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:32 IST)

யாருக்கு தெரியும் அடுத்து யாருனு... விஸ்வாசத்தால் அழகிரிக்கு ஆப்பு?

ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பேசுவதால் அடுத்து என் மீது ஏதேனும் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளனர். இந்நிலையில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக பார்க்கப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஸ்.எஸ்.அழகிரி அவரின் கைதுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். 
அந்த வகையில் தற்போது மீண்டும் ப.சிதம்பரத்தின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். கே.எஸ்.அழகிரி கூறியதாவது, பழி வாங்கும் நோக்கில் ப.சிதம்பரம் கைது நடந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். 
 
இந்த கைது காரணமாக, இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மிகவும் கட்டுப்பாடான கட்சி. யார் தவறு செய்தாலும் கட்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.