செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:05 IST)

''மொபைல் கட்டணம் உயரவுள்ளது - Vodafone-Idea தலைவர் தகவல்

5g network
சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம்  நடந்தது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா நெட்வோர்க், அதானி டேட்டா நெட்வோர்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த 5 ஜி ஏலத்தில், ரூ.1.40 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொபைல் போன் சேவை கட்டண உயர்வு குறித்து , வோடபோன் ஐடியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கூர் கூறியுள்ளதாவது:

அனைத்துவித போன் சேவை கட்டணங்களும் இந்த ஆண்டின் இறுதியில் அதிகரிக்கும். 5ஜி ஸ்பெக்ரம் ஏலத்திற்கு என சில தொகைகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், 5 ஜி கட்டணம் என்பது 4 ஜி கட்டண சேவையைவிட அதிகரிக்கும்.

இன்ட 5ஜி சேவையில், கூடுதல் டேட்டா இருக்கும், இதனால், நுகர்வும் அதிகரிக்கும். வாடிக்கைளரின் வரவேற்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவமம் ரூ.18,500 மதிப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.