வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (19:16 IST)

5ஜி ஏலம்: ஜியோ, எர்டெலுக்கு போட்டியாக அதானியின் டேட்டா நெட்வோர்க்!

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை சார்பில் சமீபத்தில்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

இதற்கு சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இதில்,ஜியோ, வோடபோன்,  ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற  நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்ப விண்ணப்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க இந்தியாவின் டாப் பணக்காரராக உள்ள அதானி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில்  5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க வுள நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதானியின் டேட்டா நெட்வோர்க்ஸ்,ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய  நிறுவங்கள் விண்ணப்பித்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே முன்னணியில் உள்ள ஜியோ, ஏர்டெல் , வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு அதானியின் டேட்டா நெட்வோர்க் கடும் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில்5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் 4  புள்ளி 5 லட்சம் கோடி திரட்டவுள்ளதாக கூறப்படுகிறது.