ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:53 IST)

பாலியல் புகாரில் சிக்கிய எம்.எல்.ஏ.! இணையத்தில் வீடியோ வைரல்.? ஆளும் கட்சிக்கு நெருக்கடி..!

MLA
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கு தேசம் கட்சியின் சத்யவேடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம். இவர் மீது பெண் ஒருவர், பாலியல் புகாரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், அது தொடர்பாக  இணையத்தில் ஒரு சர்ச்சை வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் டிவி எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,  பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் எழுத்துபூர்வமாக நடந்தவற்றை எழுதியது போல ஓர் கடிதம் உள்ளது. 
 
அதில், ” சத்யவேடு சட்டமன்றத் தொகுதியில் பெண் பொறுப்பாளராக நான் செயல்பட்டு வருகிறேன். ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என எங்கள் தெலுங்கு தேசம் கட்சியில் கோனேட்டி ஆதிமூலம் சேர்ந்தார்.
 
தெலுங்கு தேசம் கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்கியதை நாங்கள் முதலில் எதிர்த்தோம். இருந்தும், கட்சித் தலைமை கூறியதன் பெயரில் கோனேட்டி ஆதிமூலம் தேர்தலில் வெற்றிபெற தீவிரமாக வேலை செய்தோம். 
 
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆதிமூலம் என்னிடம் பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் ,  “ஆதிமூலம் என்னை அடிக்கடி பாலியல் ரீதியில் சீண்டியதால், நான் என் கணவரிடம் இதனை கூறினேன்.

அவர் கூறியதன் பெயரில் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று பிக் டிவியின் எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனுடன், ஆதிமூலம் எம்எல்ஏ தனக்கு அடிக்கடி போன் கால் செய்ததற்கான ஸ்க்ரீன் ஷாட் போட்டோக்களும் அதில் பதிவிடப்பட்டு இருந்தது.
 
மேலும், ” என் கணவர் கூறியதன் பெயரில், ஆதிமூலம் என்னை பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்ததை வீடியோவாக பதிவு செய்து அதனை ஆதாரமாக அளித்துள்ளேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த சர்ச்சையான வீடியோ இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.   

இந்த வீடியோ மற்றும் புகார் கடிதம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு எம்.எல்.ஏ கோனேட்டி ஆதிமூலம்  முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், தனது சொந்த கட்சியினரே தனக்கு எதிராக சதி செய்வதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

 
மேலும், தான் பேசிய தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்றும், அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ கோனேட்டி ஆதிமூலம் கூறியுள்ளார்.