வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (19:05 IST)

ஒரே ரிங்.. மிஸ்டு கால்: உஷாரா இருங்க மக்களே...

பொதுவாக கஸ்டமர் கேர், வங்கி போன் கால், போன்ற சில அழைப்புகள் அனைவருக்கும் வரும். அப்படி வரும் சில அழைப்புகள் நார்மல் மொபைல் எண்கள் போன்றே இருக்கும். 
 
செல்போனுக்கு சர்வதேச போன் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களை கேரள மாநில காவல்துறை எச்சரித்துள்ளது. 
 
அதாவது சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு காலை, மீண்டும் நாம் தொடர்பு கொள்ள முயன்றால் ஏராளமான பணத்தை இழக்க நேரிடுமாம்.  
 
கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இந்த முறையில் சர்வதேச கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாகவும் கேரள போலீஸார் எச்சரித்துள்ளனர். 
 
இந்த மோசடிக்கு வான்கிரி என பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் வான்கிரி என்றால் ஒரு ரிங், உடனே கட் என்று பொருளாகும். கேரளாவில் உள்ள செல்போன்களுக்கு +591 என்று துவங்கும் எண்ணில் இருந்து மிஸ்டு கால்கள் வருகின்றன. 
 
இந்த அழைப்புகள் பொலிவியா நாட்டில் இருந்து வருகின்றன. அந்த எண்ணை தொடர்பு கொண்டால், ஒரு நிமிடத்திற்கு ரூ.200 வீதம் பணத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.