வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (18:23 IST)

பார்ன் ஸ்டார் படங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேருந்து

கேரளா மாநிலத்தில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று சன்னி லியோன், மியா களிபா உள்பட பல பார்ன் ஸ்டார்களின் புகைப்படங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு வலம் வருகிறது.

 
கேரளா தனியார் சுற்றுலா பேருந்தின் உரிமையாளர் ஒருவர் பேருந்தை நாவல் பாணியில் அலங்கரிக்க முடிவு செய்தார். அதன்படி அமெரிக்கா பார்ன் துறையை பிரதிலிக்கும் படி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பார்ன் துறையில் பிரபலமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 
 
சன்னி லியோன், மியா களிபா உள்பட பிரபலமானவர்களின் புகைப்படங்கள் ஓவியமாக இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து பேருந்தின் உரிமையாளர் கூறியதாவது:-
 
இப்போதெல்லாம் கல்லூரி சுற்றுலா செல்லும் பேருந்துகளில் மாணவர்கள் சன்னி லியோன் படத்தை பேனராக கட்டுவது டிரெண்டாக உள்ளது. அது பேருந்தின் பெயர் மற்றும் விவரங்களை மறைத்துவிடுகிறது. இதனால்தான் இந்த புதிய ஐடியா தோன்றியது. பேருந்து முழுக்க பார்ன் ஸ்டார் புகைப்படங்களை ஓவியமாக வரைந்துவிட முடிவு செய்தோம்.
 
இதற்கு ரூ.2.6 லட்சம் செலவாகியுள்ளதாம். இப்படி அலங்கரிக்கப்பட்ட பேருந்து கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது.