1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (22:50 IST)

மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படத்தை ஹெச்.வினோத்குமார் இயக்கியிருந்தார். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது.

துணிவு படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

ஆனால், லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிக்கவுள்ள படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அஜித்- மகிழ்திருமேனி இணையும் படத்திற்கு கடந்த மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளார்.

இந்த  நிலையில் கிரீடம், என்னை அறிந்தால் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் அஜித்துடன் திரிஷா இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.