புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:57 IST)

நாளை முதல் ஆன்லைன் ஷாப்பிங் அனுமதி! ஆனால் இந்த கட்டுபாடுகள் உண்டு!

நாளை முதல் இந்தியா முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

நாட்டில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டெலிவரி வேன்கள் இயங்க முறையான அனுமதி பெற்றே இயங்க முடியும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’அத்தியாவசியமற்ற பொருட்களின் விநியோகம் ஊரடங்கு காலத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளன. மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.