புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (22:13 IST)

கதை திருட்டு :ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம் !

சிவகார்த்திகேயன் , கல்யாணி அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹீரோ. இப்படத்தை மித்ரன் இயக்கியிருந்தார். ஆனால்,  இப்படத்தின் கதை என்னுடையது என போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் கதைத்திருட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு 10- 03-20 அன்று வேறு மொழிகளில் இப்படத்தை இடைக்காலத்தடை விதித்தாலும் மொழிமாற்றம் ஆகியவற்றிற்கு இடைக்காலத்  இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

பின்னர், இப்படம் கடந்த மாதம் அமேசான் பிரைம்மில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதுகுறித்து போஸ்கோ கூறியதாவது, ஹீரோ திரைப்படத்தை வேற்று மொழியிலும், எந்த வகையிலும் வெளியிடுவதற்கு  டிஜிட்டல் இணையதளம் மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சியில் வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமேசான் பிரைமிற்கு அதன் நகலை அனுப்பினேன். இதைப்பார்த்த அவர்கள் ஆன்லைனில் இருந்து படத்தை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.