1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (15:03 IST)

சாலையில் பயங்கர விபத்து : அமைச்சரின் மகன் பலி !திடுக் சம்பவம்

உத்தராகண்ட் மாநிலத்தின் பிரபல  அமைச்சர்  பாண்டேவின் மகன் அங்கூர் பாண்டே  (ankuur pande) ,இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 
இன்று அதிகாலையில்,  ஃபரித்பூர் அருகேயுள்ள என் ஹெச் 24 சாலையில் அமைச்சர் மகனின் கார் சென்று கொண்டிருந்த போது,எதிர்பாராத விதமாக ஒரு லாரி மீது மோதியது. 
 
இந்த விபத்தில் காரில் பயணித்த அமைச்சர் பாண்டேவின் மகன் அங்கூர் பாண்டே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மேலும், அவருடன் பயணித்த 2 பேர் ( நண்பர்கள் ) இறந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவ்சமாக உயிர்தப்பிய நிலையில் அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் உத்தராகண்டில் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.