1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:00 IST)

ராகுல் காந்தி ஒரு 'ஸ்டாண்ட் அப் காமெடி: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மோடி மற்றும் அதானி முகமூடி போட்ட எம்பிகளிடம் ராகுல் காந்தி கேள்வி கேட்பது போன்ற வீடியோ நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில், நேற்று மோடி மற்றும் அதானி ஆகியோரை கேலி செய்யும் வகையில் அவர்களது உருவ முகமூடி அணிந்தவர்களிடம் ராகுல் காந்தி பேட்டி எடுப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ராகுல் காந்தி தனக்கு ஏது நன்றாக வருகிறதோ அதை நன்றாக செய்துள்ளார்; அதுதான் ஸ்டாண்ட் அப் காமெடி. அவரது பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் விசாரணைகளின் முடிவில் நொறுங்கி விடுகின்றன. மக்களிடம் எடுபடாத பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் அடைந்து வரும் தோல்விகள் அவரது பழைய குற்றச்சாட்டுகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதற்கு சாட்சியாக உள்ளன. மேலும் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஸ்டாண்ட் அப் காமெடி என்ற கோமாளித்தனமான வேலைகளை செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Siva