இந்தியா கூட்டணி தலைவர்.. மம்தா பானர்ஜிக்கு குவிகிறதா ஆதரவு?
இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் என்று மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு குவிந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் ராகுல் காந்தியின் பிரச்சார வியூகம் இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கே பிடிக்கவில்லை என்றும் நாட்டில் பல பிரச்சனை இருக்கும் போது அதானி பிரச்சனையை மட்டுமே அவர் முன்னெடுத்து வருவது இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
அதேபோல் பாராளுமன்றத்திலும் ராகுல் காந்தி, அதானி பிரச்சனையை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்றும் தமிழகத்தில் உள்ள மழை பாதிப்பு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையும் அவர் பேச முன்வரவில்லை என்பதால் இதனால் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், திமுக மட்டுமே ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva