1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (07:55 IST)

தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள் நியமனம்.. வியாபாரி அதிரடி..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தக்காளி வாங்க வரும் பொது மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் தக்காளி திருடு போகாமல் இருக்கவும் தக்காளி வியாபாரி ஒருவர் பவுன்சர்களை நியமனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமனம் செய்வார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை விண்ணை முட்டிய விலையில் தக்காளியை பாதுகாப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. 
 
தக்காளி வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாலும் தக்காளி திருடு போவதாகவும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது கடை முன் இரண்டு பவுன்சர்களை நிறுத்தி வைத்துள்ளார். 
 
அந்த பவுன்சர்கள் தக்காளி வாங்க வரும் பொதுமக்களை வரிசைப்படுத்தவும் தக்காளி  திருடு போகாமல் பார்த்துக் கொள்ளவும் பணி செய்து வருகின்றனர் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva