திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (17:47 IST)

நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளியை சேர்க்க மாட்டோம்: மெக்டொனால்ட் அறிவிப்பு..!

நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளியை சேர்க்க மாட்டோம் என மெக்டொனால்ட்  நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
தக்காளி விலை கடந்து சில நாட்கள் ஆக அதிகரித்து வருகிறது என்பதையும் தமிழகத்தில் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை 250 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நாங்கள் தயாரிக்கும் உணவுகளில் தக்காளியை சேர்க்கப்போவதில்லை என மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் டெல்லி கிளை அறிவித்துள்ளது. 
 
தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் தாங்கள் தயாரிக்கும் உணவுகளில் தக்காளியை சேர்க்கப் போவதில்லை என்றும் தக்காளி சம்பந்தப்பட்ட உணவுகளை ஆர்டர் எடுக்க போவதில்லை என்றும் மெக்டனால்ஸ் டெல்லி கிளை தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran