மோடி ஜி எங்க வீட்டு மாப்பிள்ளை !!! பரவசத்தில் பொங்கிய செல்லூரார்!!!

Last Modified புதன், 27 மார்ச் 2019 (16:02 IST)
மோடி தான் எங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆனால் திமுகவில் இன்னும் யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் சிலர் எப்பொழுதும் மோடியையும் பிஜேபியையும் ஓவராக புகழ்வர். அந்த லிஸ்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு ஆகியோர் பரவசப்பட்டு புல்லறிக்கும் படி புகழ்வர். ஆனால் மோடியையும், பிஜேபியையும் தேர்தலுக்கு முன்னர் கழுவி ஊற்றிய எம்.பி தம்பிதுரை, தற்போது பிஜேபியின் கொள்கை பரப்பு செயலாளர் போல வேலை செய்து வருகிறார்.
 
அப்படி சமீபத்தில் கூட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
 
ராஜேந்திர பாலாஜிக்கு நான் எந்த விதத்திலும் சலைத்தவன் அல்ல என நிரூபிக்கும் வகையில் மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பிரதமர் மோடி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு எங்களால் பெண் கேட்டு செல்ல முடியும். ஆனால் திமுக கூட்டணியில் யார் மாப்பிள்ளை என்றே தெரியாத போது அவர்கள் எப்படி பெண் தருவார்கள்? என கேள்வி எழுப்பினார். இவரின் இந்த கேள்விக்கு திமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :