1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (07:03 IST)

எம்சிஏ படிப்பு இனி மூன்றாண்டுகள் எல்லை: அதிரடி குறைப்பு

எம்சிஏ படிப்பு இனி மூன்றாண்டுகள் எல்லை
மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு கால தாமதமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது அதிரடியாக எம்சிஏ படிப்பு இனி மூன்றாண்டுகள் இல்லை என்றும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் செய்ய அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் எம்சிஏ படித்து வரும் மாணவர்கள் மற்றும் இனி படிக்க விரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றப்படுவது வரும் ஆண்டில் 2020-21ம் ஆண்டில் இருந்து சேருபவர்களுக்கு அமலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. எம்சிஏ படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுளளதால் பாட திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது