வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (17:13 IST)

ஊரடங்கை மீறி ஜாக்கிங் சென்றாரா ஆர்யா? சர்ச்சையான டிவீட்!

நடிகர் ஆர்யா ஊரடங்கு விதிகளை மீறி இன்று ஜாக்கிங் செய்ததாக சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

நடிகர் ஆர்யா எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வம் உடையவர். உடற்பயிற்சி, சைக்கிளிங் என அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவார்.

இந்நிலையில் இன்று அதே போல அவர் செய்த ஒரு செயல் கண்டனங்களைப் பெற்றுள்ளது. சென்னையில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தனது பயிற்சியாளருடன் 2 மணிநேரத்துக்கும் மேலாக ஜாக்கிங் சென்ற புகைப்படத்தையும் தான் சென்ற பகுதிகளின் விவரங்களையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதைப்பார்த்த பலரும் விதிகளை மீறி அவர் இவ்வாறு செய்தது தவறு என கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி நடைபயிற்சி உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.