புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (14:22 IST)

ஸ்தம்பித்தது டெல்லி - நெரிசலில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி - ஹரியானா எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். 

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் 300 நாட்களை கடந்த நிலையில் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். 
 
அதன்படி இன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கியது நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சாலை மறியல் போராட்டம் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதனால் பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 
 
போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லியே ஸ்தம்பித்து இருக்கிறது.