செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (08:10 IST)

கொரோனா எதிரொலி: காசி விஸ்வநாதர் சிலைக்கும் முகக்கவசம்

காசி விஸ்வநாதர் சிலைக்கும் முகக்கவசம்
சீனா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் கொரோனா வைரஸால் 54 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரதானப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும் இதுவரை ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்ட 40 பேரும் படிப்படியாக குணமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள காசி விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசத்தை அணிவிக்கப்பட்டது. காசி விசுவநாதர் கடவுளுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சமா? என ஒரு சிலர் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
இதுகுறித்து காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பூசாரி பேட்டி அளித்த போது ’கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வை பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதற்காகவும் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவும் காசி விஸ்வநாதருக்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாகவும், காசி விஸ்வநாதருக்கு கொரோனா உள்பட எந்த நோயும் தாக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காசி விசுவநாதர் ஆலயத்தின் பூசாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்