1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (15:39 IST)

”மாஸ்க் மகாதேவ்”: லிங்கத்திற்கு மாஸ்க் போட்டு அழகு பார்த்த பக்தர்கள்!

காற்று மாசுபாடிலிருந்து காத்துக்கொள்ள கடவுள்களுக்கு மாஸ்க் அணிவித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அபாய அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் பல நகரங்களில் மக்கள் முகமூடி அணிந்தபடியே தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகிறார்கள்.
 
அதுவும் குறிப்பாக வாரணாசி தொகுதி அதிகமான கோவில்கள் உள்ள முக்கியமான புண்ணிய ஸ்தலம் ஆகும். வாரணாசியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அபாய அளவான 500 புள்ளிகளை தாண்டி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலர் மாஸ்க் அணிந்து இருப்பது போல அங்கு கோவில்களில் உள்ள கடவுள்களுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோலியில் உள்ள சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் காற்று மாசு அதிகரித்துவிட்டது. இந்த விஷக்காற்றில் இருந்து கவுள் சிவபொருமானை காப்பாற்றுவதற்காக மாஸ்க் அணிவித்து இருக்கிறோம். அவர் நலமாக இருந்தால் நாம் நலமாக இருப்போம் என அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.