புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (12:29 IST)

சிவன் கோவிலில் நடந்த ஓரின காதல் திருமணம்: பக்தர்கள் அதிர்ச்சி

வாரணாசியில் உள்ள சிவன் கோவிலில் உறவுக்காரப் பெண்கள் இருவர் திருமணம் செய்த சம்பவம், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஒரின காதல் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. ஓர் ஆண் இன்னொரு ஆணை காதலிப்பது, ஓர் பெண் இன்னொரு பெண்ணை காதலிப்பது போன்ற உறவுகள் தற்போது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் சட்டப் பிரிவு 377-ல் திருத்தம் செய்யப்பட்டு, ஓரின காதல் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் நேற்று, வாரணாசியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில், ரோஹானியாவைச் சேர்ந்த இரண்டு உறவுக்காரப் பெண்கள், தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட செய்தி, அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்துடன், சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சிவன் கோவிலில் உள்ள ஆச்சாரத்தை தீட்டுப்படுத்தியதாகவும், மேலும் இது இந்து மத கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டி அவர்களை ஆலயத்தில் இருந்து துரத்தினர்.

மேலும் இந்த நிகழ்வை குறித்து, இந்து மதத்தைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர், ஓரின காதல், இந்து மத கலாச்சரத்திற்கு எதிரானது இல்லை என்றும், இந்து மத புராணங்களிலேயே ஓரின காதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.