வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (08:27 IST)

இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

Mask
இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரள மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்து உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த உத்தரவை மேலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 கேரளாவை அடுத்து தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva