1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:37 IST)

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அண்டை மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்..!

Face Mask
தமிழகம் கேரளா உட்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சளி, காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva