1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (09:57 IST)

ஒரே நாளில் 298 பேருக்கு கொரோனா.. 2 பேர் பலி! – கேரளாவை உலுக்கும் கொரோனா!

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.



கடந்த 2019 முதலாக உலகை உலுக்கி வரும் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர், பலியாகினர். பின்னர் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதுடன் கொரோனா பரவலும் குறைந்தது. இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கொரோனா பயம் இன்றி மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் வகை பரவ தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்போது பரவல் அதிகரித்து தினசரி நூற்றுக்கணக்கான பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 298 பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவது, பொது இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K