வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (14:30 IST)

மம்தாவை வீழ்த்த கம்யூனிஸ்டுடன் பாஜக கூட்டணி!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.

 
மத்திய அரசான பாஜகவிற்கு காங்கிரஸ் மட்டுமல்லாமல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட எதிர்கட்சிகள் அனைத்து பாஜகவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய அளவில் பாஜவை வீழ்த்த மம்தா மூன்றாவது அணியை உருவாக்கி வருகிறார். 
 
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் கங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், கிராம புறங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக பாஜக வேட்பாளர்களும், பாஜக வேட்பாளர்களுக்காக மார்க்சிஸ்ட் வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுள்ளனர்.