வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:36 IST)

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாதது ஏன்?

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
ஐந்து மாநில தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு ஆலோசனை செய்வதற்காக காங்கிரஸ் செயற்குழு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மன்மோகன் சிங் அவர்களுக்கு உடல் நலக்குறைவு இருப்பதன் காரணமாக இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்