திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (18:47 IST)

விவசாயிகளுக்கான பட்ஜெட்டா இது?: கேள்விகளை அடுக்கும் மன்மோகன் சிங்!

2018-19-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறுகையில் பாஜக அரசு தோற்றுப்போய் விட்டது என்பதை பட்ஜெட் நிரூபித்துவிட்டதாக கூறினார்.
 
இதனையடுத்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார மேதையும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
மன்மோகன் சிங் கூறுகையில், தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என நான் கூற மாட்டேன். ஆனால் நிதி கணக்கில் ஏதேனும் தவறு இருக்கலாம். விவசாய பாதிப்பை சமாளிக்க எந்த மாதிரியான யுத்தி கையாளப்படுகிறது. விவசாயிகளின் வருமானம் எப்படி இரட்டிப்பாகும். இந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.