1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:52 IST)

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா! மருத்துவமனையில் சிகிச்சை?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரம்பா, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர். இந்நிலையில் கனடா நாட்டு தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


நேற்று குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைந்து சென்றபோது நடிகை ரம்பாவின் கார் எதிர்பாராதவிதமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ரம்பா மற்றும் அவரது குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியதாகவும் ரம்பா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு குழந்தைக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட்தாக அவர் கூறியுள்ளார். ரம்பாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K