வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:55 IST)

தப்பு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்! – பால விபத்தில் உறவினர்களை இழந்த எம்.பி!

gujarat
குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என உறவினர்களை இழந்த பாஜக எம்.பி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் மோர்பியில் இருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 142 பேர் பலியான நிலையில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் குஜராத் மாநில பாஜக எம்.பி மோகன்பாய் குந்தாரியா என்பவரின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய எம்.பி மோகன்பாய் குந்தாரியா “தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் எனது சகோதரி குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பால விபத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்” என்று கூறியுள்ளார்.

Edited By Prasanth.K