புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (17:31 IST)

ருசியான அமித்ஷா மாம்பழம்..! – மாங்காய் மனிதரின் புதிய அறிமுகம்!

Amitshah Mango
”மாங்காய் மனிதர்” (Mango Man) என்று அழைக்கப்படும் ஹாஜி கலிமுல்லா கான் தற்போது புதிய வகை மாம்பழத்திற்கு அமித்ஷாவின் பெயரை வைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 82 வயதான விவசாயி ஹாஜி கலிமுல்லா கான். கடந்த பல ஆண்டுகளாக வித்தியாசமான பல மாம்பழ வகைகளை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ள கலிமுல்லா பல புதிய வகை மாம்பழங்களை உருவாக்கியுள்ளார்.

முன்னதாக ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் பெயரில் மாம்பழங்களை அறிமுகப்படுத்திய கலிமுல்லா சில ஆண்டுகள் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பிக்கும் விதமாக “நமோ மாம்பழம் (NaMo Aam) அறிமுகப்படுத்தினார்.

இவர் தற்போது மேலும் ஒரு புதிய வகை மாம்பழத்தை உருவாக்கி அதற்கு “அமித்ஷா மாம்பழம்” என பெயரிட்டுள்ளார். இதுவரை பல்வேறு புதிய வகை மாம்பழங்களை உருவாக்கியுள்ள “மாங்காய் மனிதர்” கலிமுல்லாவுக்கு கடந்த 2008ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.