1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (08:53 IST)

செவ்வாய் கிரகத்தில் செயலிழந்த மங்கள்யான்..? – விஞ்ஞானிகள் பிரியாவிடை!

Mangalyan
இந்திய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 2014ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் இஸ்ரோவின், இந்தியாவின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.


பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் இந்த மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 6 மாதங்கள் வரை ஆயுட்காலம் கொண்ட மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் சுமார் 8 ஆண்டுகளாக செயல்பட்டு பல தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது மங்கள்யான் செயலிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், 1.40 மணி நேரம் மட்டுமே பேட்டரி செயல்படும் நிலையில் கிரகணங்கள் நீண்ட நேரம் நீடித்ததால் விண்கலம் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Edited By: Prasanth.K