1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (12:37 IST)

விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை: இஸ்ரோ தகவல்

ISRO
இன்று வெற்றிகரமாக விண்ணில் அனுப்ப இரண்டு செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாகவும் ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைக்கோளில் இருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்
 
செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டை மீண்டும் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சிக்னல் மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார் 
 
விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என்ற தகவல் நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது