சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த முடியவில்லை… முதியவரைக் கட்டி வைத்த தனியார் மருத்துவமனை!
மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பணம் கட்ட முடியாத முதியவரை கட்டி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சஜாபூரில் 80 வயது முதியவர் ஒருவர் வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு மொத்தமாக 11,000 ரூபாய் கொடுக்கவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. ஆனால் முதியவரின் சிகிச்சைக்கு 5000 மட்டுமே கட்ட முடிந்துள்ளது அந்த குடும்பத்தால்.
இதையடுத்து மீதிப்பணத்தையும் கட்டினால்தான் முதியவரை வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூறி அவரை படுக்கையிலேயே வைத்துக் கட்டியுள்ளனர் நிர்வாகத்தினர். இது சம்மந்தமாகப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி கண்டனங்களைப் பெற்றது. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இது சம்மந்தமாக மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை நடத்த, அந்த முதியவருக்கு வலிப்பு வந்ததால்தான் கட்டிவைத்ததாக சொல்லியுள்ளது.