ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (07:23 IST)

காலி படுக்கைகள் விபரம் தெரிந்து கொள்ள இணையதளம் வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலி படுக்கைகள் குறித்த விவரம் தெரிந்துகொள்ள தமிழக அரசு பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
இந்த இணையதளத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளகாலி படுக்கைகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காலி படுக்கைகளை விவரங்களை http://tncovidbeds.tnega.org என்னும் வலைதளத்தின் மூலம் ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள், ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது