கொரோனா ஊரடங்கு: மாஸ்க் அணிவதில் தகராறு! மகனைக் கொலை செய்த தந்தை!
கொல்கத்தாவில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்ற மகனைத் தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி செல்லும்போதும் பாதுகாப்பு அம்சங்களான முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் அடிக்கடி மாஸ்க் அணியாமல் வெளியே சென்று வந்த தனது மகன் 45 சர்ஷிண்டு மாலிக்கிடம் 78 வயது முதியவர் பன்ஷிதால் மாலிக் தகராறு செய்துள்ளார். இது சம்மந்தமாக வாக்குவாதம் முற்றி மகனைக் கழுத்தை நெறித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரண்டர் ஆகியுள்ளார்.
இதையடுத்து போலீசார் குற்றம் செய்த நபரை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தந்தைக்கும் மகனுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்தது இல்லை என்றும் மகன் மாற்றுத்திறனாளி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.