வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:40 IST)

குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூசாரியிடம் அழைத்துச் சென்ற பெற்றோர்! அங்கு நடந்த கொடூரம்!

கர்நாடகாவில் குழந்தை 3 நாளாக சாப்பிடாததால் பூசாரியிடம் அழைத்துச் சென்றதில் குழந்தை அநியாயமாக பலியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதிக்கு அருகே வசித்து வரும் தம்பதிகள் பிரவீன் மற்றும் ஷியாமாலா. இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை 3 நாட்களாக எந்த உணவும் சாப்பிடாததால் பயந்து போன பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அருகில் உள்ள பூசாரியான, ராகேஷ் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி, பூஜை செய்ய வேண்டும் என சொல்லியுள்ளார். அந்த பூஜையின் போது குழந்தையை அடித்துள்ளார். அதில் குழந்தை பலியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான பூசாரி குழந்தை பூர்விகாவை, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்ட நேரத்துக்குப் பிறகும் குழந்தைக்கு மயக்கம் தெளியாததால் அதிர்ச்சியான பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லியுள்ளார்கள். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பூசாரி ராஜேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.