1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 8 ஜூன் 2017 (16:31 IST)

மகளை பலாத்காரம் செய்த தந்தை: கன்னித்தன்மையை சோதிக்க ஆணிகள் மீது நிற்க வைத்த பூசாரி!

மகளை பலாத்காரம் செய்த தந்தை: கன்னித்தன்மையை சோதிக்க ஆணிகள் மீது நிற்க வைத்த பூசாரி!

பெங்களூரில் ராஜகோபால் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த 48 வயதான ரமேஷ் குமார் என்பவர் தனது மகளை நீண்ட நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
ரமேஷ் குமார் தனது மகளை வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இப்படியே அவர் நீண்ட நாட்களாக செய்து வர 25 வயதான அந்த இளம்பெண் தனது தாயிடம் தந்தை தன்னிடம் நடந்துகொள்வது பற்றி கூறியுள்ளார்.
 
ஆனால் தனது மனைவியிடம் ரமேஷ் குமார் இதனை மறுத்துள்ளார். மகளின் கன்னித்தன்மையை பூசாரி ஒருவரை அழைத்து நிரூபிக்கிறேன் என கூறியுள்ளார். அதன் படி மல்லேஷ் என்ற பூசாரியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ரமேஷ். அந்த பூசாரி ஆணிகள் அடிக்கப்பட்ட சந்தனக்கட்டை ஒன்றை கொண்டு வந்து அதன் மீது அந்த பெண்ணை ஏறி நிற்க சொல்லியுள்ளார்.
 
இதனால் அந்த பெண்ணின் காலில் இருந்து இரத்தம் வழிய அவர் கன்னித்தன்மையை இழக்கவில்லை என பூசாரி மல்லேஷ் அந்த பெண்ணின் தாயிடம் கூறியுள்ளார். இருந்தாலும் இவர்கள் மீது சந்தேகம் கொண்ட அந்த பெண்ணின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
 
காவல்துறை இளம்பெண்ணின் தந்தை ரமேஷ் குமாரை விசாரித்ததில் அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்த பூசாரியும் பணம் வாங்கிக்கொண்டு கன்னித்தன்மை சோதனையில் அப்படி சொன்னதாகவும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.