1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (19:01 IST)

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மம்தா பானர்ஜி

Mamtha
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
குடியரசுத் துணை குடியரசு தலைவர் தேர்தல் கடந்த திங்கள் அன்று நடைபெற்றது என்பதும் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சோனியா காந்திக்கு நெருக்கமானவராக மார்கரெட் ஆல்வா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளரை அறிவித்ததால் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது