1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (16:32 IST)

மோடிக்கு நிகரான எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க மாநிலம் தோறும் பாஜகவுக்கு எதிரான பலமான கூட்டணி வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. 
மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் பாஜக பலவீனமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜக பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
இந்நிலையில், காங்கிரஸ் பாஜகவை பலவீனப்படுத்த மாநிலம் தோறும் பிராந்தியக்கட்சிகளை கூட்டணி சேர்த்து வலுவான எதிர்கட்சியாக உருவாக திட்டமிட்டுள்ளது. 
 
இதற்கு முதலில், மோடிக்கு எதிராக வலுவான பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்த வேண்டும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரா முன்நிறுத்துவது என்பதை மாநில பிராந்தைய கட்சிகள் எதிர்க்கின்றன. 
 
பிரதமர் வேட்பாளராக மாநில அளவில் செல்வாக்குடன் இருக்கும் மம்தா பானர்ஜி, சரத்பவார் போன்றவர்கள் இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதில் மம்தாவிற்கு அதிக ஆதரவு உள்ளது. 
 
இது குறித்து மம்தாவிடம் கேட்ட போது இது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என கூறி மழுப்பினார். எனவே, ராகுலை பிரதமாரக்குவதில் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.